திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 9 மார்ச் 2017 (22:37 IST)

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் போராட்டம் திடீர் நிறுத்தி வைப்பு ஏன்?

புதுக்கோட்டை அருகில் உள்ள நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் கடந்த 22 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதியினர்களும், அனைத்து துறையினர்களும் ஆதரவு கொடுத்து வந்ததால் மத்திய மாநில அரசுகள் போராட்டத்தை நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடத்தின


 


இந்நிலையில் இன்று இரவு முதல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம். போராட்டக் களத்திற்கு அருகே பள்ளிகள் இருப்பதால், தேர்வுகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டும் இந்த முடிவை எடுத்துள்ளோம். 22 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தில், எங்களுக்கு ஆதரவு தெரிவித்த பல்வேறு தரப்பு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,’’  என்று கூறியுள்ளனர்.

இருப்பினும் ஒரு தரப்பினர் இந்த போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்து இன்னும் போராட்டக்களத்திலேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.