திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (11:16 IST)

ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுக – அமமுக மோதல்!

ஜெயலலிதா பிறந்தநாளான இன்று அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுக – அமமுகவினர் இடையே தகராறு எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினார்கள். ஜெயலலிதாவின் தோழியான சசிக்கலா வரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா பிறந்தநாள் தமிழகம் முழுவதும் தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது. தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்ய அதிமுகவினரும், அமமுகவினரும் ஒரே சமயத்தில் வந்ததால் யார் மரியாதை செய்வது என்பதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.