வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (17:35 IST)

பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியர்கள் விடுவிப்பு

பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு  கிளி ஜோசியம் பார்த்ததாக கைது செய்யப்பட்ட இரண்டு கிளி ஜோசியர்கள் சில மணி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடலூர் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் இன்று காலை தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது தற்செயலாக கிளி ஜோசியர்களை பார்த்து அவரிடம் நான் வெற்றி பெறுவேனா என்று கேட்டுள்ளார். 
 
அந்த கிளி ஜோசியர்கள் இரண்டு பேர் கிளி மூலம் ஜோசியம் பார்த்து கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று கூறியதை அடுத்து தங்கர் பச்சான் அவர்களிடம் விடை பெற்று சென்று விட்டார். 
 
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் கிளியை கூண்டில் அடைத்து கொடுமைப்படுத்துவது சரியா என்ற கேள்வி கேட்க அதற்கு பதிலடியாக நெட்டிசன்கள் அரசே பறவைகளையும் விலங்குகளையும் உயிரியல் பூங்காக்களில் கூண்டுகளில் அடைத்து தானே வைத்துள்ளனர், அதுமட்டும் சரியா என்று பதிலடி கொடுத்தனர். 
 
இந்த நிலையில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த ஜோசியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நான்கு கிளிகளை மட்டும் பறிமுதல் செய்து ஜோசியர்களை எச்சரித்து வனத்துறையினர் அவர்களை விடுதலை செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran