வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (15:11 IST)

தமிழக போலீசாருக்கு தீவிரவாதிகள் மிரட்டல் ...

chennai police

தமிழக கியூ பிரிவுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அல்ஹிந்த் பிரிகேட் என்ற தீவிரவாத அமைப்பு சமூக வலைதளங்களில் தமிழக போலீஸாருக்கு ஒரு மிரட்டல் கடிதம் விடுத்துள்ளது.
 
அந்தக் கடிதத்தில் டெல்லி சிறப்பு பிரிவு மற்றும் கியூ பிரிவை கண்காணித்து வருவதாகவும், உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அந்தக் கடிதம் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் போலீஸாருக்கு மிரட்டல் கடித்தம்  விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
 
மேலும், எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில்  தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வருவதால் அதற்காக பழிவாங்கும் நோக்கில் இக்கடிதம் எழுதப்பட்டிருக்கலாம் என்ற நோக்கில் போலிஸார்  விசாரணையை தொடங்கியுள்ளனர்.