செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 மே 2023 (10:22 IST)

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம்..!

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கம் என்பது வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 
அண்ணா பல்கலையின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளை தற்காலிகமாக மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ் வழி பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, 6 ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளும் மூடப்படும் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran