Daily Horoscope
✕

கியாஸ் சிலிண்டர் முன்பதிவில் திடீர் கோளாறு: பொதுமக்கள் அவதி!

Written By Mahendran
Updated: புதன், 7 செப்டம்பர் 2022 (10:41 IST)
கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளதை அடுத்து சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர். 
 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இதனால் முன்பதிவு செய்ய முயற்சித்த பொதுமக்கள் முன்பதிவு செய்ய முடியாமல் உள்ளனர்
 
இந்த நிலையில் இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 
வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி, 77189-55555 என்ற எண்ணுக்கு குரல் பதிவு மூலம் முன்பதிவு செய்யலாம். அல்லது 84549-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அல்லது இந்த எண்ணில் நேரடியாக பேசியும், 75888-88824 வாட்ஸ்-அப் மூலமும், வினியோகஸ்தர்களின் தொலைபேசி எண் மற்றும் நேரடியாக சென்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் முன்பதிவு பதிவு செய்யப்படும். முடிந்தவரை விரைவில் சிலிண்டரை உங்களுக்கு வழங்குவோம். விரைவில் சிக்கலைத் தீர்த்துவிடுவோம் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
 
 

எல்லாம் காட்டு

மட்டமான கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறார் ராகுல் காந்தி: ஸ்மிருதி இரானி கண்டனம்...

7 நாட்களுக்கு பின் 2 கரப்பான்பூச்சிகளுக்கு ஜாமின்.. போராட்டம் செய்ய மாட்டோம் என வாக்குறுதி...

சவூதி அரேபியாவின் எண்ணெய் கிணறு மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. 2 பேர் பலி...

எம்.எல்.ஏ கார் வாங்க ரூ.15 லட்சம்!.. அமைச்சர்களுக்கு ரூ.25 லட்சம்!.. தமிழக அரசு அரசாணை!...

அமெரிக்கா தூதரை வரவேற்கிறோம்!.. ரிலையன்ஸ் நிறுவனம் நெகிழ்ச்சி!...

அடுத்த கட்டுரையில்
Show comments