வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (12:29 IST)

181-வது வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவீர்கள்? கனிமொழியிடம் ஆசிரியர்கள் வாக்குவாதம்..!

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 181-வது வாக்குறுதியை அளித்த நீங்கள் எப்போது அதை நிறைவேற்றி தருவீர்கள் என கனிமொழி எம்பியுடன் ஆசிரியர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் இருக்கும் கனிமொழி பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை கேட்டு வருகிறார். அந்த வகையில் ஆசிரியர் சங்கத்தினரிடம் அவர் ஆலோசனை செய்த போது கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 181-வது  வாக்குறுதியான பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தீர்களே, அந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றுவீர்கள் என்று கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

எங்கள் பிரச்சனை குறித்து எதிர்க்கட்சியினர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் சட்டமன்றத்தில் பேசியபோது தொகுப்பூதியத்தில் ரூ.2500 உயர்த்தி தருவதாக அறிவித்தனர், ஆனால் இப்போது வரை ஊதிய உயர்வு கிடைக்கவில்லை

அதேபோல் ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பிட்டிற்கான ஆணையும் வெளியிடப்படவில்லை என்று கேள்வி கேட்டனர், அப்போது கனிமொழி எம்பி அவர்கள் நிதி பிரச்சனை இருந்தும் ஒவ்வொரு வாக்குறுதியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருவதாகவும் விரைவில் ஆசிரியர்களை நிரந்தரம் ஆக்கும் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

Edited by Mahendran