புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (09:34 IST)

என் பையன்கிட்ட பேசு.. இல்லைனா ஃபெயில்தான்! – மாணவியை மிரட்டிய ஆசிரியை!

School
உடுமலைப்பேட்டையில் தனது மகனிடம் பேசாத வகுப்பு மாணவியை ஆசிரியரே மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலைபேட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த வகுப்பின் ஆசிரியராக சாந்திபிரியா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். சாந்திபிரியாவுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

சாந்திபிரியாவின் மகன் அந்த 12ம் வகுப்பு மாணவியை காதலித்துள்ளார். அதற்கு அந்த மாணவி மறுத்துள்ளார். ஆனால் தனது மகனை காதலிக்க வேண்டும் என அம்மாணவியை வகுப்பாசிரியை சாந்திபிரியா மிரட்டியுள்ளார்.


அடிக்கடி மருமகளே என அந்த மாணவியை அழைத்ததோடு தனது மகனிடம் பேச சொல்லி மாணவியை வற்புறுத்தியும் உள்ளார். தனது மகனிடம் பேச மறுத்தால் மாணவியின் மதிப்பெண்களில் கை வைப்பேன் என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியை சாந்திபிரியாவை பணியிட மாற்றம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K