புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (09:05 IST)

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் – பாலியல் வழக்கில் 5 ஆண்டு சிறை !

நாகராஜ் மற்றும் புகழேந்தி

செங்கல்பட்டில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்த நல்லாசிரியர் விருது பெற்ற நாகராஜ் என்ற ஆசிரியர் பாலியல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் நல்லாசிரியர் விருது பெற்ற நாகராஜ். இவர் மற்றும் மற்றொரு ஆசிரியர் புகழேந்தி ஆகிய இருவரும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அவர்கள் மேல் புகார் கொடுக்க, கைது செய்யப்பட்ட இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து மாணவிகள் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 25000 ரூபாய் அபராதமும் 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்துள்ளது.