புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 17 டிசம்பர் 2019 (18:32 IST)

பாலியல் தொல்லை தந்த தந்தையை ... துண்டு துண்டாக வெட்டி கடலில் வீசிய மகள் !

பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை வெட்டி கடலில் வீசிய மகள் காதலுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள மாகிம் பீச்சில் கடந்த 4 ஆம் தேதி அங்குள்ள கரையில் ஒரு சூட்கேஸ் மிதந்து வந்ததுள்ளது. அதைப் பார்த்த மக்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சூட்கேஸை திறந்து பார்த்தனர். அதில் , நெகிழிப் பைக்குள் ஒரு ஆணின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு எறிந்தது தெரியவந்தது.
 
அதில், நபர் அணிந்திருந்த ஆல்மோஸ் மென்ஸ் வியர் என்ற கடையின் பெயர் இருந்ததால், அதை அடையாளம் வைத்து துப்பறிந்தனர்.ம் இறுதியில் கொலை செய்ப்பட்டது பெனட் (59) என்பதும்ம், மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததால் கடந்த 26 ஆம் தேதி அவரது வளர்ப்பு மகள் ஆரத்யா(17)  கத்தியால் பெனட்டை குத்தி கொலை செய்ததுள்ளார்.
 
பின்னர் உடலை துண்டாக்கி ஒரு நெகிழிக் கவரில் போட்டு , சூட்கேஸில் வைத்து கடலில் எறிந்துள்ளார் என்பதை கண்டறிந்துள்ளனர். தற்போது ஆரத்யாவை கைது செய்த போலீஸார் அவரை சிறுவர் சீர்திருந்த பள்ளியில் சேர்ந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய் உள்ளது