1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Father sexually abused his children

பெற்ற குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த தந்தை – போக்ஸோ சட்டத்தில் கைது !

ராமநாதபுரம்
ராம்நாதபுரம் மாவட்டத்தில் தனது இரு மகள்களுக்கும் பாலியல் தொல்லைக் கொடுத்த மாரிமுத்து என்ற தந்தை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு 7 மற்றும் 5 வயதில் இரு மகள்கள் உள்ளனர். மாரிமுத்துவின் மனைவி தினமும் கூலி வேலைகளுக்கு சென்றுவிடுவதால் குழந்தைகள் அதிகநேரம் தனிமையில் இருக்கவேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் வழக்கம்போல வேலைக்கு சென்ற அவர், வீட்டுக்குத் திரும்பியபோது குழந்தைகள் அழுதுள்ளனர். அவர்களிடம் கேட்டபோது தந்தை மாரிமுத்து தங்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததை சொல்லியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்த தாய், காவல் நிலையத்தில் இதுகுறித்துப் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட போலிஸார் மாரிமுத்துவை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
இப்போ புல்லட் ரயில் ரொம்ப அவசியமா? – பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!