தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ரூ.9,000 கோடி முதலீடு
டாடா நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில், மக்களுக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டாடா நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளதாவது:
''தமிழ் நாட்டில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான வாகன தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க டாடா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு இடையே முதல்வர் மு .க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமானது. இதன் மூலம் 5000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடக்க்கும் எனவும், முதல் முறையாக 2 மாதங்களில் ஆட்டோமொபைல் துறையில் 2 பெரிய முதலீடுகளை தமிழ் நாடு பெற்று சாதித்திருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.