வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (12:33 IST)

ஒரே நாளில் டாஸ்மாக் வசூல் ரூ.160 கோடி! – வாங்கு குவித்த மது பிரியர்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக இன்று முதல் டாஸ்மாக் கடைகள் கிடையாது என்பதால் நேற்று ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் மதுபானக்கடைகள் ஏப்ரல் 7ம் தேதி மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் மதுபானம் கிடைக்காது என்பதால் நேற்று இரவே மது பிரியர்கள் மதுபானக்கடைகளில் புகுந்து நிறைய மதுபாட்டில்களை வாங்கி சென்றுள்ளனர். இதனால் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் வசூல் ரூ.160 கோடியாக உள்ளது.