திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (10:42 IST)

இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளைத் திறக்க தடை.

 
அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் பெற்ற மதுபான கூடங்கள், கிளப்புகளை சார்ந்த பார்கள், ஹோட்டல்களை சார்ந்த பார்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை மீறி தமிழகத்தில் மதுபானம் விற்பனை நடந்தால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.