1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 24 ஜனவரி 2024 (11:57 IST)

மதுபானங்கள் விலை ரூ.10 உயர்கிறதா? குடிமகன்கள் அதிர்ச்சி..!

மதுபானங்களின் விலை 10 ரூபாய் உயர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
டாஸ்மாக் மதுபானங்களின் விலை அவ்வப்போது உயர்ந்து கொண்டே வரும் நிலையில் தற்போது டாஸ்மாக் மதுபானங்கள் குவாட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
இந்த விலை உயர்வு பாராளுமன்றத்துக்கு முன்பு உயருமா அல்லது தேர்தலுக்கு பின்னர் உயருமா என்பதை அரசு விரைவில் முடிவு செய்யும் என்று விலை உயர்வு கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறப்படுகிறது.  
 
ஏற்கனவே தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது கடைகள் மூலம் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி வருமானம் வந்து கொண்டிருக்கும் நிலையில் மேலும் விலை உயர்த்தப்பட்டால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த விலை உயர்வு காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி சுமைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran