டாஸ்மாக்கில் மதுப்பிரியர்களை அடித்து விரட்டிய விஷால்! – நடந்து என்ன?
சமீபத்தில் சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கி வரும் நடிகர் விஷால் தற்போது டாஸ்மாக் ஒன்றில் மதுப்பிரியர்களை அடித்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழில் சண்டக்கோழி, திமிரு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகராக இருப்பவர் விஷால். கடந்த சில காலமாக விஷாலுக்கு நல்ல படங்கள் அமையாத நிலையில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி பெரும் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீப காலமாகவே நடிகர் விஷால் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு பெண்ணுடன் விஷால் செல்வதும், அவரை வீடியோ எடுப்பதை பார்த்ததும் முகத்தை மூடிக் கொண்டு ஓடுவதும் வைரலானது. அதன்பின்னர் அது சித்தரிக்கப்பட்டு திட்டமிட்டே நகைச்சுவைக்காக அவ்வாறு எடுக்கப்பட்ட என விஷால் விளக்கம் அளித்தார்.
அதுபோல தற்போது டாஸ்மாக் பார் ஒன்றில் மதுவாங்க மதுபிரியர்கள் கூட்டமாக காத்திருக்கும் நிலையில் அங்கு வந்த விஷால் அவர்களை அடித்து விரட்டும் வீடியோ வைரலாகியுள்ளது. ஆனால் இதுவும் சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோவே எனக் கூறப்படுகிறது. அதில் உள்ளவர்களின் முகபாவங்களும் அதையே உறுதிப்படுத்துகின்றன.
தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ரத்னம் படத்திற்காக போடப்பட்ட டாஸ்மாக் ஷெட்டில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதை விஷாலே அந்த வீடியோவில் சொல்லி அவர்களை அடித்து விரட்டுகிறார். விஷால் தொடர்ந்து தன்னை ட்ரெண்டில் வைத்துக் கொள்ள இவ்வாறு சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை எடுத்து வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Edit by Prasanth.K