அடுத்த தமிழ்தாய் வாழ்த்து பஞ்சாயத்து : அதிமுக விழாவில் பரபரப்பு (வீடியோ)
மக்களவை துணை சபாநாயகர் மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாதியிலிருந்து ஒலிபரப்பான நிலையில், செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியதையடுத்து மீண்டும் ஒரு முறை தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப் பட்டது.
தமிழகத்தில் ஆண்டாள் – கவிஞர் வைரமுத்து பிரச்சினை ஒய்ந்தநிலையில், இன்று தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தலை ஒங்கியுள்ளது, ஆளுநர் கலந்து கொண்ட நூல் வெளியிட்டு விழாவில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமி அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது, அமர்ந்து இருந்த காட்சி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித நேய வாரவிழா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் விழா கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனால், நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜும் சரியான நேரத்தில் வந்து காத்திருந்தார். ஆனால், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்தனர். இந்நிகழ்ச்சியில், தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அப்போது அப்பாடல் பாதியிலிருந்து ஒலிபரப்பானது. பின்னர் அங்கிருந்த செய்தியாளர்கள் சுட்டிக்காட்டிய நிலையில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இதையறிந்து மீண்டும் ஒலிபரப்ப சொன்னார். இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து அரசு விழாவில் பாதியுடன் ஒலிபரப்பான நிலையில், மீண்டும் ஒலிபரப்பப்பட்டது.
ஒரே நிகழ்ச்சியில் இருமுறை அதுவும் அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பான நிகழ்வு பொதுநல மற்றும் சமூக நல ஆர்வலர்களிடம் மிகுந்த வேதனை ஏற்படுத்தியுள்ளது.