திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (12:35 IST)

பணம் இல்லைன்னு தப்பிக்க முடியாது: போக்குவரத்து விதிமீறலுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம்

போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் ஏடிஎம் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் வசூலிக்கும் முறையை தமிழக போக்குவரத்துக் காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது விதிக்கப்படும் அபராதங்கள் இதுவரை பணமாக மட்டுமே வசூல் செய்யப்பட்டு வந்தன். அதற்கான ரசீதுகள் அபராதம் விதிக்கப்பட்டவருக்கு வழங்கபடும். தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளால் கையில் பணம் வைத்து கொள்வது வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரிடம் அபராதம் வசூலிக்க இ-செலான் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உடனடியாக ஏடிஎம் கார்டுகள் அல்லது கிரெடிட் கார்டை உபயோகித்து அபராதத்தை செலுத்தி உடனடியாக ரசீதையும் பெற்றுக்கொள்ளலாம்.

ஏடிஎம் கார்டு இல்லாதவர்களுக்கு மின் ரசீது வழங்கப்படும். அதை மூன்று மாதங்களுக்குள் தபால் அலுவலகம், எஸ்.பி.ஐ வங்கிகளில் கொடுத்து அபராதத்தை செலுத்தலாம்.

இந்த திட்டம் தற்போது மதுரையில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள போக்குவரத்து காவலர்களுக்கு கேமரா வசதியுடன் கூடிய 32 இ-சலான் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.