வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 5 ஜூன் 2021 (14:38 IST)

ப்ளஸ்டூ மாணவர்களுக்கு தடுப்பூசிக்கு பின் பொதுத்தேர்வா? – தமிழக அரசு பரிசீலனை!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முன்பாக தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்ட கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், இரண்டு நாட்களாக கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் தேர்வு நடத்துவது குறித்த கருத்துகளை கேட்டறிந்தார்.

அதை தொடர்ந்து இன்று பொதுத்தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அதில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் தேர்வு அவசியம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். எனவே மாணவர்களுக்கு கொரோனா பரவல் ஏற்படாமல் தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதால் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியபின் செப்டம்பர் மாதத்தில் பொதுத்தேர்வுகளை நடத்தலாம் தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.