புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (21:59 IST)

தமிழ் மாநிலம் உருவான நாள் விழா! கருவூர் திருக்குறள் பேரவை கொண்டாடுகிறது!

தமிழன் என்று சொல்லடா  ...தலை நிமிர்ந்து நில்லடா!
என்ற வரிகளுக்கு ஏற்ப தமிழனை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கச் செய்யும் வண்ணம் தமிழ் பேசும் தமிழர்கள் வாழுகிற பகுதியை தமிழ் மாநிலமாக தமிழகம் தமிழ் நாடு எனப் பேசுவதற்கு உரிமை தந்த நாளான நவம்பர் – 1, வரும் வெள்ளிக்கிழமை கருவூர் திருக்குறள் பேரவை சார்பில் சங்க காலப் புலவர்கள் நினைவுத் தூணிற்கு மாலை அணிவித்து  தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் தலைமையில் கவிஞர் நன்செய் புகழூர் அழகரசன் , க.ப.பாலசுப்பிரமணியன், புலவர் கருவை மு.குழந்தை, தமிழன் குமாரசாமி எசுதர், புலவர் குறளகன்,  திருமூர்த்தி,  மூங்கில் ராஜா, சே.அன்பு க.நா.சதாசிவம், குமாரசாமி ஐயா நாச்சிமுத்து, எழுத்தாளர் ரோட்டரி பாஸ்கர், புலவர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் உரையாற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குவர் என தெரிவித்துள்ளார்.
 
மேலும், தமிழ் ஆர்வலர்கள், படைப்பாளர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கருவூர்  திருக்குறள் பேரவைச் செயலர் தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும்., தமிழ்நாடு மாநிலம் உருவான நாளை மையமாக கொண்டு கவிஞர்கள் பதினாறு வரியில் கவி பாடலாம் சிறந்த மூன்று கவிதை களுக்கு பரிசு வழங்கப்படும். பாடுவோர் 9443593651 எண்ணில் புதன்கிழமை மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.