1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2020 (10:45 IST)

பொதுத்தேர்வு முக்கிய தேதிகள்; ரிசல்ட் தேதி அறிவிப்பு!

தமிழத்தில் நடைபெறும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதி மற்றும் ரிசல்ட் வெளியாகும் தேதிகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
.

தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கி அனைத்து பள்ளிகளிலும் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டில் 10ம் வகுப்பு தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும், 11ம் வகுப்பு தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும், 12ம் வகுப்பு தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுத இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்புக்கு மார்ச் 27ல் தொடங்கும் தேர்வு ஏப்ரல் 13ல் நிறைவடையும். தேர்வு முடிவுகள் மே 4ம் தேதி வெளியாகும்.

11ம் வகுப்புக்கு மார்ச் 4ல் தொடங்கும் தேர்வு மார்ச் 26ல் முடிவடையும். தேர்வு முடிவுகள் மே 14 அன்று வெளியாகும்,

12. வகுப்புக்கு மார்ச் 2ல் தொடங்கும் தேர்வு மார்ச் 24ல் முடிவடையும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ல் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.