அமித் ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு..
சிஏஏ குறித்து அமித் ஷா உடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிஏஏக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது.. குறிப்பாக சமீபத்தில் வெடித்த டெல்லி வன்முறை இந்திய மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அதே போல் தமிழகத்திலும் சிறுபான்மையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர், சிஏஏ, என்பிஆர் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.