தமிழக அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு! – விருது தொகை உயர்வு!
தமிழக அரசின் பெரியார் மற்றும் அம்பேத்கர் விருதுக்கான நபர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் பெரியார் மற்றும் அம்பேத்கர் பெயரில் சிறந்த சமூக செயல்பாட்டாளர்களுக்கான விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விருது தொகையாக அவர்களுக்கு ரூ.1 லட்சம் அளிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இந்த விருதுகளுக்கான நபர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2021ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது திராவிட பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. டாக்டர் அம்பேத்கார் விருந்து ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துருவுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விருது தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
விருது தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழை ஜனவரி 15 திருவள்ளுவர் தினத்தன்று முதல்வர் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.