வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 ஜூலை 2023 (09:30 IST)

அரசு பணிகளில் முன்னுரிமை.. யாருக்கு தெரியுமா? – தமிழக அரசின் அறிவிப்பு!

TN assembly
தமிழக அரசு பணிகளில் யார் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறித்து சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளிலும் பல பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக அவ்வபோது அரசின் பணி அறிவிப்புகளும் வெளியாவது வழக்கம். இந்த பணியிடங்களை நிரப்புவதில் சிலருக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் அரசு பணிகளில் முன்னதாக அரசு பள்ளியில் முழுவதும் தமிழ்வழி கல்வியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் சட்டமன்றத்தில் தமிழக அரசு பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா காலத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கும் அரசு பணி வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K