செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (08:57 IST)

மாநில கல்விக்கொள்கையில் என்னவெல்லாம் இருக்கணும்..? – கருத்துகளை தெரிவிக்க..!

TN assembly
தமிழ்நாடு அரசு உருவாக்கி வரும் மாநிலக் கல்விக்கொள்கை குறித்த கருத்துகள், ஆலோசனைகளை அனைவரும் வழங்கிட இமெயில் மற்றும் முகவரியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநிலங்களில் அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு தனக்கென மாநில கல்விக்கொள்கை திட்டத்தை வகுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்த சிறப்புக்குழு கல்விக்கொள்கை குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிய உள்ளனர். இதற்காக தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து அனைத்து பகுதி மக்களிடமும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் மூலம் பொதுமக்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பலரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது.

இதுதவிர பொதுமக்கள் அரசின் [email protected] என்ற இமெயில் முகவரி மூலமாகவும், சென்டர் பார் எக்செல்லன்ஸ் கட்டிடம், 3-வது தளம், களஞ்சியம் கட்டிடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600025 என்ற அஞ்சல் முகவரிக்கு கடிதம் மூலமாகவும் தங்கள் கருத்துகள், ஆலோசனைகளை செப்டம்பர் 15ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.