செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2023 (11:31 IST)

பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட்! ஆதார் கட்டாயம்! – அரசு அறிவிப்பு!

பெண் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்த பின்னர் ரூ.3 லட்சம் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பெண் குழந்தைகளுக்கு அவர்களது 3 வயது பூர்த்தியடையும் முன்பே அவர்களது பெயரில் அரசு ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்து அவர்கள் வளர்ந்த பின்னர் வட்டியுடன் ரூ.3 லட்சமாக அந்த தொகையை அளிக்கிறது.

சமீப காலமாக தமிழ்நாடு அரசின் அனைத்து சேவைகளிலும் ஆதார் இணைப்பு அவசியமாக மாறி வருகிறது. மின்வாரிய கணக்கை தொடர்ந்து தற்போது இந்த பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கும் ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளது. 3 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தங்கள் ஆதாரை கொண்டு ஆதார் எண்ணை வாங்கி அதை வைத்து விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆதார் எண் இல்லாதவர்கள் அதற்காக விண்ணப்பித்த விண்ணப்ப எண்ணை சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதுபோல இந்த திட்டத்திற்காக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுபிக்க வேண்டியது அவசியமாக உள்ள நிலையில் ஆதார் இல்லாமல் பதிவு செய்தவர்களும் ஆதார் எண்ணை சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Edit by Prasanth.K