அமெரிக்க நிபுணரை களமிறக்கும் மு.க.ஸ்டாலின்! – முதல்வரின் பொருளாதார நிபுணர்கள்??
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் முதல்வருக்கான பொருளாதார நிபுணர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் துவங்கியது. இது முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடராகும்.
இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கான பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன். அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், டெல்லி பொருளாதார பள்ளியை சேர்ந்த ஜீன் ட்ரெஸ் மற்றும் முன்னாள் நிதித்துறை செயலாளர் எஸ்.நாராயணன் ஆகியோர் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.