ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (08:11 IST)

குடை எடுத்துக்கோங்க.. 26 மாவட்டங்களில் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இன்று அதிகபட்சமாக 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.


அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு,சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் காரக்கால் மற்றும் அதனை ஒட்டிய சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K