செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (12:17 IST)

ஓணம் கொண்டாட்டம்; மேலும் 4 தமிழக மாவட்டங்களில் விடுமுறை!

Onam
ஓணம் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள மேலும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகை கேரள மக்களால் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் கன்னியாக்குமரி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஓணம் பண்டிகை பலரால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிக்கை செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஓணம் பண்டிகையொட்டி செப்டம் 8 அன்று தமிழக மாவட்டங்களான சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்னதாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓணம் பண்டிகைக்காக மொத்தம் 9 தமிழக மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.