தமிழக பாஜக நிர்வாகிகள் பட்டியல்: செயற்குழு உறுப்பினராக நமீதா, கௌதமி!
தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள், அணி, செயற்குழு உறுப்பினர்களின் மொத்த பட்டியலில் நமீதா, கௌதமி உள்ளிட்ட திரை பிரபலங்களும் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக பாஜகவின் புதிய மாநில துணை தலைவர்கள், பொது செயலாளர்கள், பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் மொத்த பட்டியலை தமிழக பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
திமுகவிலிருந்து விலகி தமிழக பாஜகவில் இணைந்த வி.பி துரைசாமிக்கு பாஜக மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. செய்தி சேனல் விவாதங்களில் பிரபலமான ராம சுப்பு தேசிய பொதுக்குழு உறுப்பினராக பதவி பெற்றுள்ளார்.
இவர்களை தவிர சினிமா பிரபலங்களான நமீதா, கௌதமி, குட்டி பத்மினி மற்றும் மதுவந்தி ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த விரிவான பட்டியலை தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.