செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2020 (11:06 IST)

கட்சி மாறுனாலும் தரமான போஸ்டிங்! – பாஜக முக்கிய பதவியில் வி.பி.துரைசாமி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கு கட்சியின் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை பொதுசெயலாளராக பதவி வகித்து வந்த வி.பி.துரைசாமி கடந்த மே மாதம் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் திமுகவிலிருந்து பதவி விலக திட்டமிட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரை துணை பொதுசெயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக்குவதாக திமுக தலைமை அறிவித்தது.

அதை தொடர்ந்து அவர் பாஜக தமிழ்நாடு தலைவர் முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார். திமுகவில் பெரிய பொறுப்பு வகித்து வந்தவர் என்பதால் அவருக்கு பாஜகவில் முக்கியமான பதவி அளிக்கப்படும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் பாஜக தமிழக துணை தலைவராக வி.பி.துரைசாமிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.