ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2020 (12:25 IST)

தமிழகத்தில் மேலும் சிறப்பு ரயில்கள்; ஆன்லைனிம் மட்டுமே முன்பதிவு!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 5 ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில் தற்போது மெல்ல தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக தளர்வுகள் அளிக்கப்பட்டபோது தமிழக மாவட்டங்களுக்குள் பயணிகள் ரயில்கள் இயங்க அனுமதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து 13 ரயில்கள் மாநிலத்திற்குள் இயங்கி வரும் நிலையில், சமீபத்தில் சென்னையிலிருந்து திருவனந்தபுரம், மங்களூருக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது சென்னையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கும், காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்திற்குமாக மொத்தம் 5 சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்ட்டர் செயல்படாது என்பதால் ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.