வேண்டாம்னுதான் சும்மா இருக்கோம்; இல்ல நடக்கறதே வேற... பயம்காட்டும் தமிழிசை
பிரதமர் மோடி நேற்று திருப்பூர் வந்திருந்த போது அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்டது. அதோடு, #GoBackModi என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாக்கப்பட்டது. இது குறித்து தமிழிசை பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு,
தமிழக மக்களின் கொந்தளிப்பை காட்டும் விதமாக கருப்புக் கொடி காட்டினோம் என்று வைகோ தனது செயலுக்கு விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மட்டும் கருப்பு கொடியுள்ளார். பாஜக பெண் தொண்டரை தாக்கியுள்ளனர். கருப்புக் கொடி காட்டும் வைகோவின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது. எங்களுக்கும் கருப்புக் கொடி காட்டத் தெரியும். அது வேண்டாம் என நினைக்கிறோம் என ஆவேசமாக பேசியுள்ளார்.