ராஜினாமா செய்தது உண்மைதான்.. தமிழகத்தில் போட்டி.. தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..!
புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்யப் போகிறார் என்று வெளியான செய்தியை சற்று முன் பார்த்தோம். இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் தான் ராஜினாமா செய்தது உண்மைதான் என்று தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கவர்னர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பாண்டிச்சேரியில் தான் போட்டியிடவில்லை என்றும் தமிழ்நாட்டில் தான் போட்டியிட போவதாகவும் தான் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிப்பை விரைவில் கட்சி மேலிடம் அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.
இதனை அடுத்து தமிழிசை சௌந்தரராஜன் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாஜக வட்டாரங்களில் விசாரித்த போது தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னையில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva