புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (16:18 IST)

நீட் தேர்வு அவசியமானது… புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்!

தமிழகத்தில் நீட்டுக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ள நிலையில் அது தேவையானது என தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழகம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

ஆனால் தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுக நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து புதுச்சேரி ஆளுநரும் முனனாள் தமிழக பாஜகவின் ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன் ‘ஒரு மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன். நீட் தேர்வு அவசியமானது.’ எனக் கூறியுள்ளார்.