1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 16 ஜூலை 2021 (15:39 IST)

கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேவை: அண்ணாமலை

கிராமப்புற மாணவர்களுக்கு நீட்தேர்வு அவசியம் என்றும் நீட்தேர்வு வேண்டுமென்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் சமீபத்தில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதால் புதிய தலைவராக அண்ணாமலை அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து இன்று தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அண்ணாமலை சற்றுமுன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்
 
அப்போது நீட் தேர்வு என்பது கண்டிப்பாக வேண்டும் என்றும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேவை அவசியம் என்றும் நீட்தேர்வு வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார் 
 
நீட்தேர்வு வந்த பின்னர்தான் மருத்துவப் படிப்புகளுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்வது தடுக்கப்பட்டதாகவும் நீட் தேர்வின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் கடைக்கோடி மனிதனுக்கும் அங்கீகாரம் அளிக்கும் கட்சியாக பாஜக உள்ளது என்றும் 37 வயதில் பாஜக தலைவராக பொறுப்பேற்ற எனக்கு பொறுப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த பொறுப்பை எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயல்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை வழங்குமாறு தமிழக பாஜக பிரதமர் வலியுறுத்தும் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமில்லாமல் தான் தற்போது மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்