செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஜூலை 2023 (10:35 IST)

தமிழக எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல்நிலையம் வருகின்றன: கவர்னர் கிண்டல்..!

rats
தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல் நிலையம் வருகின்றன என புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நீதிமன்றத்தில் குறைந்த அளவு கஞ்சாவை சமர்ப்பிக்கும் காவல்துறை கஞ்சா வழக்கில் தொடர்புடைய இருவரை தப்பிக்க வைத்து விட்டனர் என்று குற்றம் சாட்டிய ஆளுநர் தமிழிசைம் காவல் நிலையத்தில் வைக்கப்படும் கஞ்சாவுக்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளார். 
 
22 கிலோ கஞ்சாவை காவல் நிலைய காவல்துறையினர் கைப்பற்றிய நிலையில் 11 கிலோ கஞ்சாவை மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் மீதி கஞ்சாவை எலிகள் தின்று விட்டதாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் கூறிய நிலையில் கஞ்சா கடத்தியதாக குற்றச்சாட்டியை இருவர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு குறித்து தான் தமிழிசை கிண்டலுடன் மேற்கண்டவற்றை கூடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran