1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Stalin says about PM candidate in 2024

தமிழர் பிரதமர் ஆவதில் மகிழ்ச்சி, தமிழிசைக்கு வாய்ப்பு கொடுக்கலாம்: முதல்வர் ஸ்டாலின்

தமிழர்
ஒரு தமிழர் பிரதமர் ஆனால் தனக்கு மகிழ்ச்சி தான் என்றும் குறிப்பாக தமிழிசை அல்லது எல். முருகன் பிரதமர் ஆனால் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
தமிழரை பிரதமர் ஆக்குவது குறித்து அமித்ஷா வெளிப்படையாக கூறினால் தான் அதற்கான விளக்கத்தை சொல்ல முடியும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் தமிழரை பிரதமராக்க போவதாக அமித்ஷா கூறிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாலும் மோடி மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை என்று கூறினார்.
 
2024 ஆம் ஆண்டு பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தமிழிசை அல்லது எல். முருகனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஊழியர்களை பங்குதாரர்களாக்கி வளர்ந்த பைனான்ஸ் வங்கி! – ஈஷா லீடர்ஷிப் அகாடமி!