செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 நவம்பர் 2018 (06:02 IST)

வைகோ புகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் ஏமாந்துவிடக்கூடாது: தமிழிசை

திமுக கூட்டணியில் இருப்பதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்ராக்காமல் ஓயமாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி வந்த நிலையில் மதிமுக தங்கள் கூட்டணியில் இப்போதுவரை இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் பேட்டியளித்தார். இந்த பேட்டி வைகோவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது

மேலும் துரைமுருகனின் இந்த கருத்து மதிமுக தொண்டர்களை காயப்படுத்தியுள்ளதாகவும், இதே கருத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சொல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் வைகோ கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தங்கள் தொண்டர்களை காயப்படுத்திய திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'கஜா புயல் நிவாரணப்பணியில் அதிமுக அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்' என்றும் கூறினார். திமுக தலைவரை முதல்வராக்குவேன் என்று கூறிவிட்டு அதிமுக அமைச்சர்களையும் வைகோ பாராட்டியது பெரும் முரண்பாடாக கருதப்பட்டது.

இந்த நிலையில் வைகோவின் இந்த மாறுபட்ட நிலை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியபோது, 'அதிமுக அமைச்சர்களை பாராட்டும் அண்ணன் வைகோ...? அமைச்சர்களின் களப்பணி பாராட்டுக்குரியது என்றாலும் துரைமுருகனின் பதிலால் காயப்பட்ட வைகோவின் புகழுரையில் அதிமுக அமைச்சர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.