திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2015 (05:41 IST)

தமிழண்னல் மறைவு: கருணாநிதி இரங்கல்

தமிழண்னல் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.


 

இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதிவெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சீரிய தமிழறிஞர் தமிழண்ணல், மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராக பணியாற்றியவர். பின்பு, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
 
தமிழண்ணனல், மறைவு செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியடைந்தேன். நான் எழுதிய தொல்காப்பியப் பூங்கா நூலின் முதல் பதிப்பினை தமிழறிஞர் முனைவர் தமிழண்ணல் தான் வெளியிட்டார்.
 
அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.