தவெக முதல் ஆண்டுவிழா, பொதுக்கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெற திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சி, வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்த கட்சிக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கட்சி ஆரம்பித்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து, முதல் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக மகாபலிபுரம் அருகே ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் உள்பட சில முக்கிய நிர்வாகிகள் தேர்வு செய்து உறுதி செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
பொதுக்குழு நடைபெறும் இடம், தேதி ஆகியவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran