தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்: முழு விபரங்கள்..!
ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினம் கொண்டாட இருப்பதை அடுத்து சிறப்பு ரயில்களை இயக்க தென்னிந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது குறித்து தென்னிந்தியா ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இயக்கப்படும் ரயில்களின் விபரங்கள்:
திருவனந்தபுரம்-சென்னை எழும்பூர் இடையிலான சிறப்பு ரயில் (எண்: 06044), வரும் 5, 12-ம் தேதிகளில், திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து வரும் 6, 13-ம் தேதிகளில் மதியம் 2.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06043), மறுநாள் காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
எர்ணாகுளம்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 06046), வரும் 9, 16-ம் தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.05 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து வரும் 10, 17-ம் தேதிகளில் பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06045), மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
இவ்வாறு தென்னிந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
Edited by Mahendran