வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 8 மே 2023 (21:07 IST)

தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் - முதல்வர் முக. ஸ்டாலின்

stalin -dhoni
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்க விழா மற்றும்  முதல்வர் இலச்சினை, சின்னம் வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முதல்வர் முக.ஸ்டாலின், சென்னை கிங்ஸ் கேப்டன் தோனி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை இலச்சினை மற்றும் இணையதளத்தை தோனி தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் கோப்பைக்கான கருப்பொருள் பாடலை வெளியிட்டுப் பேசிய முதல்வர், ’’தமிழகத்தில் உள்ள அனைவரையும் போல நானும் எம்ஸ் தோனியின் ரசிகர்தான்.  கிரிக்கெட் மட்டுமல்ல அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும், தமிழகத்தில் நிறைய தோனிக்களை உருவாக்க விரும்புகிறோ. தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.