செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (18:13 IST)

வெதர்மேன் கணிப்பையும் மீறி சென்னையில் மழை: சாலைகளில் வெள்ளம்!

rain
தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் சென்னைக்கு மழை இனி அவ்வளவுதான் என்று படிப்படியாக குறைந்துவிடும் என்றும் தெரிவித்திருந்தார்
 
 மேலும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மட்டும்தான் நல்ல மழை பெய்யும் என்றும் கூறியிருந்தார்
 
இந்த நிலையில் வெதர்மேன் கணிப்பையும் மீறி சற்றுமுன் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அரை மணி நேரத்திற்கு மேலாக சென்னை வடபழனி மயிலாப்பூர் வேளச்சேரி அண்ணாசாலை தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது 
 
மேலும் சென்னையில் இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran