செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2019 (10:49 IST)

கிராஃபிக்ஸ் எஃபக்ட்ஸ் சூப்பர்: வானிலை மைய கணிப்பை கலாய்த்த வெதர்மேன்

விரைவில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இதை கலாய்த்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன். 
 
வரும் 29 ஆம் தேதி வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மஇய இயக்குனர் புவியரசன் தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில், இதை கலாய்த்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பது பின்வருமாறு, புயல் உருவாகுவதற்காக வானிலை ஆய்வு மையத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் நன்றாக உள்ளது. 
எனினும், 10 நாட்களுக்கு முன்கூட்டியே வானிலையை கணிப்பது இயலாத காரியம். வானிலை ஆய்வு மையம் கூறுவது போல புயல் உருவாகுவதற்கு வாய்ப்பு இருந்தாலும், அதில் மாறுதல்களும் திசைமாறுதல்களும் நிகழலாம். 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது போல புயல் உருவாகி தமிழகத்தில் மழை பொழிவு ஏற்பட்டால் அதில் மகிழ்ச்சியே. ஆனால், அதை உறுதி செய்வதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன என பதிவிட்டுள்ளார்.