தமிழகத்தில் 2 நாட்கள் வானிலை எப்படி இருக்கும்? முக்கிய தகவல்..!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்திக் கொண்டிருந்த நிலையில், நேற்று மற்றும் இன்று குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவி வருகிறது. மேலும் நேற்றும் இன்றும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், தமிழக கடற்கரை ஓரப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இன்றும் நாளையும் தமிழகத்தின் சில இடங்களில் வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் குறைய வாய்ப்பு உள்ளது. அதேசமயம், நாளை (மார்ச் 13) முதல் மார்ச் 15 வரை படிப்படியாக வெப்பநிலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொருத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Edited by Mahendran