திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2022 (17:07 IST)

தமிழகவீரர் லட்சுமணன் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்!!

laskmanan
தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில்   வீரமரணம் அடைந்த லட்சுமணனுக்கு இன்று 21 குண்குகள் முழங்க ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் என்ற இடத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் முகாம் அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்., அப்போது அப்பகுதி வழியாக இருவர் எல்லையை தாண்டி ஊடுறுவினர்.

அவர்களை நிற்க சொல்லி ராணுவத்தினர் தடுத்தபோது அவர்கள் துப்பாக்கியால் ராணுவத்தினரை நோக்கி சுடத் தொடங்கியுள்ளனர். இதனால் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர்.. இந்த துப்பாக்கிச்சூடு சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், இரு ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் தகவல்  வெளியானது.

இந்நிலையில் தீவிரவாதிகளை எதிர்த்து போராடி வீரமரணம் அடைந்த 4  ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த லெக்‌ஷமணனும் (22)ஒருவர்.

 அவர்களது உடல் காஷ்மீரில் ராணுவ முகாமில் வைக்கப்பட்டு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பின்,  லட்சுமணனின் உடல் இன்று விமானம் மூலம் மதுரை புதுப்பட்டிக்குக் கொண்டு வரபட்டது.

ராணுவ வீரர் லட்சுமணின் உடலுக்கு அமைச்சர் பிடியார். பழனிவேல், மாவட்ட ஆட்சியயர் அனீஸ்சேகர் உள்ளீட்ட பலரும்  அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து லட்சுமணன் உடல் ஊர்வலகாக கொண்டு செல்லப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது,குடும்பத்தினர், உறவினர்கள், அஞ்சலி செலுத்திய பின் 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்திய பின் அவரது உடல்  நல்லடக்கம் செய்யப்பட்டது.