தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை!
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. இது தற்போது வளிமண்டல சுழற்சியாக அதே பகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.
எனவே, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.