வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (18:16 IST)

கேரளாவில் மீட்பு பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் கேரளா அரசுக்கு-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டத்தின் சார்பில் சிறப்பு செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் முகமது ஒலி கலந்து கொண்டார்.
 
அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்......
 
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் அதிகமாக குடும்பங்கள் சிக்கி தவிக்கின்றனர். அங்கு, கேரள அரசும், இந்திய ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
 
இந்த மீட்பு பணிகளில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட தன்னார்வளர்களை அம்மாநில அரசு அனுமதிக்க வேண்டும். 
 
ஏற்கனவே கஜாபுயல், ஓகி புயல் உள்ளிட்ட பேரிடர்காலங்களில் களப்பணியாற்றி இருக்கிறோம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் இயங்கி வருகிறது. இதனை கேரளாவில் மீட்பு பணியில் ஈடுபடுத்த அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். 
 
தமிழகத்தில் மது, போதை பழக்கம் அதிகமாகி விட்டது. இதனால், சட்டம் ஒழுங்கும் பாதித்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தநிலையில், மது போதையை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆகஸ்டு மாதம் முதல் 10 மாதங்களுக்கு தொடர் பிரசாரம், போதை ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடத்த இருக்கிறோம். போதைக்கு எதிராக பல இடங்களில் பேரணி, துண்டு பிரசுரங்கள் வினியோகம், பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்த இருக்கிறோம் என தெரிவித்தார்.
 
தங்களின் ஆட்சியை காப்பாற்ற பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டுக்கு எதிராகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போராட்டங்கள் நடக்கும். தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்காமல் பாஜக அரசு இருக்காமல் கேரளாவிற்கு உடனடியாக வெள்ளநிவாரண நிதியை வழங்க வேண்டும் என்றார்.