வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 ஜனவரி 2025 (12:35 IST)

இஸ்ரோவை அடுத்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாகும் தமிழர்.. குவியும் வாழ்த்துக்கள்..!

இஸ்ரோ தலைவராக கன்னியாகுமரி தமிழர் நாராயணன் என்பவர் பதவியேற்க இருக்கும் நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதியாக ஹரிஷ் வைத்தியநாதன் ஷங்கர் என்ற தமிழர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக அஜய் திக்பால் மற்றும் வைத்தியநாதன் சங்கர் ஆகிய இருவர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இருவருக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மற்ற நீதிபதிகளும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன், 51 வயதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சியைச் சேர்ந்த இவர், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார். ஏற்கனவே இதே பொள்ளாச்சியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்ற நீதிபதியும் உச்சநீதிமன்றத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் சட்டப் படிப்பை முடித்த ஹரிஷ், இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு செய்துள்ளார். மேலும், பல முக்கிய வழக்குகளில் இவர் வாதாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, அயோத்தியா வழக்கு, கோத்ரா வழக்கு, ராணுவ மற்றும் கடற்கரை தொடர்பான வழக்குகளில் இவர் ஆஜராகியுள்ளார். உச்சநீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் வைத்தியநாதனின் மகன் தான் ஹரிஷ்  என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran